திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன்
ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகிய இருவரும் படங்கள் இயக்கியுள்ள நிலையில், கமல்ஹாசனின் மகள்களான ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் திரைப்படங்களில் நடித்து வந்தார்கள். இவர்களில் ஸ்ருதிஹாசன் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் மற்றும் தி ஐ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், எனக்கு கவிதை மட்டுமின்றி திரைக்கதைகள் எழுதுவதிலும் அதிகம் ஆர்வம். அதனால் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். திரையுலகில் தான் ஒரு புதிய பயணத்தை எதிர்பார்த்து இருப்பதாகவும், திரைக்கதைகள், கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதில் தனக்கு விருப்பம் மிகுதியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது ஒரு திரைப்படத்தின் முழு ஸ்கிரிப்ட்டை தயார் செய்யும் பணியில் தான் தீவிரமடைந்திருப்பதாக அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
விரைவில் ஸ்ருதிஹாசனை இயக்குனராகவும் எதிர்பார்க்கலாம்.