வாஷிங்டன், வேலையை இழக்கும், ‘எச்௧பி’ விசா வைத்துள்ள இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், ௬௦ நாட்களுக்குள் வெளியேற வேண்டியது கட்டாயமில்லை. தொடர்ந்து தங்கியிருக்க மாற்று வழிகள் உள்ளதாக அமெரிக்க குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, எச்௧பி விசா வழங்கப்படுகிறது. இதை, அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
கடிதம்
அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக, பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆள் குறைப்பில் ஈடுபட்டு உள்ளன.
கடந்த நவம்பரில் இருந்து இதுவரை, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பத் துறை பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர். இதில், ௪௦ சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்க சட்டத்தின்படி, எச்௧பி விசா வைத்துள்ளவர், வேலையை இழக்கும் நிலையில், ௬௦ நாட்களுக்குள் அமெரிக்காவில் இருந்து வெளியேற வேண்டும்.
இது தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள இந்தியா மற்றும் இந்திய வம்சாவளியினருக்கான அறக்கட்டளை சார்பில், அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்து, அமெரிக்ககுடியேற்றத் துறை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
வேலையை இழக்கும்போது, ஒருவருக்கு ஏற்படும் பொருளாதார மற்றும் குடும்ப பிரச்னைகள் குறித்து புரிந்து வைத்துள்ளோம். சட்டத்தின்படி, எச்௧பி விசா வைத்துள்ளவர், வேலையை இழக்கும்போது, சில வாய்ப்புகள் உள்ளன.
அவகாசம்
தங்களுடைய விசா முறையை மாற்றும்படி கோரலாம். கட்டாய பணியிழப்பு நிவாரணம் கேட்டு விண்ணப்பிக்கலாம். மாற்று வேலை தேடுவதற்கு வாய்ப்பு கேட்டு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தினால், ௬௦ நாட்களுக்குள் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படாது.ஆனால், எந்த வாய்ப்பையும் பயன்படுத்தாதவர்களுக்கு, ௬௦ நாட்களுக்கு மேல் அவகாசம் அளிக்க முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement