வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : கொரோனா பரவல் மற்றும் போர் உள்ளிட்ட காரணங்களால் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் இங்கு இரண்டு தவணைகளில் தேர்வு எழுத உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கொரேனா பரவல் காரணமாக சீனா பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் எம்.பி.பி.எஸ். இளநிலை மருத்துவப் படிப்பு படித்து வந்த மாணவர்கள்இந்தியா திரும்பினர். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்களும் நாடு திரும்பினர்.
இதில் 7வது செமஸ்டர் வரை முடித்த மாணவர்கள் மீதமுள்ள 3 செமஸ்டர்களை ‘ஆன்லைன்’ வகுப்புகள் வாயிலாக முடித்தனர்.
ஆனால் அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு திரும்பி இறுதி தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
அவர்கள் இறுதி தேர்வு எழுதி படிப்பை முடிக்க வழிசெய்யுமாறு மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நிபுணர்கள் குழு அமைத்து இந்த விவகாரத்துக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் 7வது செமஸ்டர்வரை வெளிநாட்டில் படித்த மாணவர்கள் தேசிய மருத்துவ கவுன்சில் வாயிலாக இறுதி தேர்வு எழுத ஒரே ஒரு முறை வாய்ப்பளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் இந்த தேர்வை இரண்டு தவணைகளில் எழுதி முடிக்க மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement