புதுடில்லி : தங்கத்திலான நகைகள் மற்றும் பொருட்களுக்கு ஏப்ரல் தேதியில் இருந்து பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய கழகத்தின் 6 இலக்க ஹால் மார்க் குறியீட்டு எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காலக்கெடு நீட்டிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, பி.எஸ்.ஐ., தலைவர் பிரமோத் குமார் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஏப்ரல் தேதியில் இருந்து, ஹால்மார்க்கின் 6 இலக்கக் குறியீடு இன்றி தங்க நகைகள் மற்றும் பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.
எளிதாக தொழில் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், பி.ஐ.எஸ்., தர நிலைகளை உருவாக்கி வருகிறது. ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஹால்மார்க்கின் 6 இலக்கக் குறியீடு இன்றி தங்கப் பொருட்கள் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீட்டிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.
வளர்ந்து வரும் தொழில்நுட்பமான ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பத்துக்கு ஈடாக, பி.எஸ்.ஐ., தனது தர நிலையை அமைத்துள்ளது.
பழைய நகை இருப்புகளை விற்று தீர்பதற்காக, நகை உற்பத்தியாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. இப்போது மேலும் அவகாசம் அளிக்கப்படாது.
நகைக்கடைக்காரர்களின் ஆலோசனையின் படி, தங்க நகைகள் மற்றும் கலைப் பொருட்களின் எடையையும் ஹால்மார்க்கின் ஒரு பகுதியாக சேர்க்க பி.எஸ்.ஐ., முடிவு செய்துள்ளது.
லேசர் இயந்திரங்களின் வாயிலாக குறிக்கப்படும் இந்த 6 இலக்க குறியீடு, நுகர்வோரின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், மக்கள் ஏமாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் வழங்கப்படுவதாகும்.
இதற்காக நாட்டில் 1,400 ஹால்மார்க் மையங்கள் உள்ளன.
இவ்வாறு திவாரி கூறினார்.
தூய்மைக்கான சான்றிதழ்
தங்கத்திற்கான ஹால்மார்க் என்பது, துாய்மைக்கான சான்றிதழாகும். இந்தச் சான்றிதழ் கடந்த 2021 ஜூன் மாதம் வரை, தானாக முன்வந்து பெறும் வகையில் இருந்தது. பின், கடந்த 2021ம் ஆண்டு ஜூலை முதல் கட்டாயமாக்கப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஹால்மார்க் குறியீடு மூன்று பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். பி.ஐ.எஸ்., லோகோ, நகையின் துாய்மை, ஆறு இலக்க எண்ணெழுத்துக்கள் ஆகியவை கொண்டதாக இருக்கும். ஹால்மார்க் குறியீடு பெறப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும், பிரத்யேகமான எண்ணெழுத்துக்கள் இருக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்