தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியருக்கான தகுதித் தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான முதல் தாள் கடந்த அக்டோபர் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. முதல் தாள் தேர்வின் முடிவுகள் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் தாளுக்கான கணினி வழித்தேர்வு நடந்தது.
இது, கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 15ம் தேதி வரை காலை/ மாலை என இரு வேளைகளில் நடத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான 2ம் தாள் முடிவுகள் நேற்று மாலை வெளியானது.
அதன் படி, ஆசிரியர் தகுதித் தேர்வு 2ஆம் தாளில் 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை. இந்த தேர்வில் 4 லட்சம் லட்சம் பேர் தகுதி பெற்றனர். ஆனால், இதில், 1.5 லட்சம் பேர் நடத்தப்பட்ட தேர்வுக்கே வரவில்லை எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.