இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார ஊடகத்துறை அமைச்சின், பதில் ஊடகத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன வெளிநாட்டுப்பயணமொன்றை மேற்கொண்டுள்ள காரணத்தினால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (28) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.