தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.
அதிரடி துடுப்பாட்டம்
ஜோன்ஸ்பர்க்கில் நடந்த கடைசி டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
பிரண்டன் கிங் அதிரடியாக 36 ஓட்டங்களும், மேயர்ஸ் 17 ஓட்டங்களும் எடுத்து வெளியேறினர்.
@windiescricket (Twitter)
சார்லஸ் ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழக்க, நிக்கோலஸ் பூரன் வாணவேடிக்கை காட்டினார்.
மொத்தம் 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 4 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் விளாசினார். அதன் பின்னர் வந்த ரெய்பர் 27 (18) ஓட்டங்களில் அவுட் ஆனார்.
ஷெப்பர்ட் விஸ்வரூபம்
கடைசி கட்டத்தில் விஸ்வரூப ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷெப்பர்ட், 22 பந்துகளில் 44 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 220 ஓட்டங்கள் குவித்தது. இங்கிடி, ரபடா மற்றும் நோர்ட்ஜெ தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
2️⃣ 6️⃣ 4️⃣ 6️⃣ 6️⃣ 2️⃣
Romario Shepherd takes 26 off Kagiso Rabada’s final over to set South Africa 221 to chase 💥
What a cameo from the No.9 👏#SAvWI pic.twitter.com/Rffvft8WV9
— Wisden (@WisdenCricket) March 28, 2023
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் 44 பந்துகளில் 83 ஓட்டங்கள் விளாசினார். ரோஸோவ் 21 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
நிலைகுலைய வைத்த ஜோசப்
தென் ஆப்பிரிக்கா அதிரடியாக 200 ஓட்டங்களை கடந்த நிலையில், அல்சரி ஜோசப்பின் மிரட்டலான பந்துவீச்சால் 7 ஓட்டங்களில் வெற்றியை இழந்தது.
அந்த அணி 20 ஓவரில் 213 ஓட்டங்கள் எடுத்தது.
OUT!
Big Alzarri Joseph strikes in his 1st over with massive wicket of @QuinnyDeKock69 🔥#MenInMaroon #SAvWI
Scorecard: https://t.co/jbjshvugWZ pic.twitter.com/oTDhwiIzwb
— Windies Cricket (@windiescricket) March 28, 2023
கடைசி வரை வெற்றிக்காக போராடிய கேப்டன் மார்க்ரம் 18 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.
அபாரமாக பந்துவீசிய அல்சரி ஜோசப் 5 விக்கெட்டுகளையும், ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை ஜோசப் வென்றார்.
ஒருநாள் தொடர் சமனில் முடிந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.
A thrilling victory for the West Indies in the third T20I has helped them clinch the series 2-1 against South Africa 🙌#SAvWI | 📝 https://t.co/1moH3039YO pic.twitter.com/xSFGoudgjh
— ICC (@ICC) March 28, 2023