உஷார்… பண்ணையில் வளர்க்கும் வெண்பன்றிகளுக்கு ஆப்பிரிக்க காய்ச்சல்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கல்லாங்குளம் என்ற இடத்தில் ராஜாமணி என்பவர் கடந்த சில வருடங்களாக வெண்பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவருடைய பண்ணையில் வளர்க்கப்பட்ட இரண்டு பன்றிகள் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உயிரிழந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜாமணி, தனது பண்ணையில் இருந்த இரண்டு பன்றிகள் திடீரென இறந்தது பற்றி, நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், அங்கு சென்ற மருத்துவ குழுவினர் இறந்த பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து, போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தாக்கி பன்றிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

வெண் பன்றி பண்ணை

இந்த நிலையில், அந்த பண்ணையை கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு இருந்த குட்டிகள் உள்ளிட்ட 20 வெண் பன்றிகளுக்கும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவர, அவற்றை 15 அடி ஆழம் குழி தோண்டி புதைத்தனர். மேலும், அந்த பண்ணையைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங்கால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் பேசியுள்ளதாவது, “இந்த நோயானது பன்றிகளிலிருந்து மனிதர்களுக்கோ மற்ற கால்நடைகளுக்கோ பரவாது. பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் இது. அதேபோல், இந்த நோயானது நோய் தாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்கு பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட்டுமே பரவக்கூடியது. இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோய். எனவே, தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுத்தமாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவைக்கொண்ட நடைபாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித்தல், ஓட்டல் மற்றும் விடுதிகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை பன்றிக்கு தீவனமாக வழங்காமல் இருப்பது மற்றும் வெளியாட்கள் பண்ணையில் நுழைவது தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

வெண் பன்றி பண்ணை

இதனைப் பார்த்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்றனர். இந்நிலையில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், ”நாமக்கல் மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றி செல்லும்போது, அது குறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும்” என காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.