பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வகுத்துள்ள திட்டம் மிகவும் ஆபத்தானது என ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
அணு ஆயுத திட்டம்
ரஷ்ய மற்றும் உக்ரைனுக்கு இடையே நடக்கும் போருக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் யுத்தத்தில், ரஷ்யாவின் ஜனாதிபதி புடினின் செயல் கண்டிக்கத்தக்கது, என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(joe biden) விமர்சித்திருந்தார்.
@shutter stock
இந்த நிலையில் ரஷ்யாவின் நெருங்கிய நாடான பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடன்(Alexander Lukashenko) இணைந்து, அணு ஆயுதங்களை பெலாரஸில் நிலை நிறுத்த உத்தரவிட்டிருந்தாக ரஷ்யப் படை தளபதி அறிவித்துள்ளார்.
அமெரிக்கா கண்டனம்
ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளின் அண்டை நாடான உக்ரைனைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
@afp
ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து வரும் இத்திட்டத்திற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) கூறியுள்ள திட்டம் மிகவும் “ஆபத்தானது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியுள்ளார்.
@brookings
இதுவரை ரஷ்யா அணு ஆயுதங்களை நகர்த்தியதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
”இன்னும் அணு ஆயுதங்களை உபயோகப்படுத்தவில்லை” என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.