நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக காவல்நிலையங்களில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசாரணைக்கு அழைக்கப்பட்ட சிலரின் பற்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை அறிக்கை வந்தவுடன் உடனடியாக மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.