கர்நாடகா பா.ஜ.,வினர் தனது தந்தையின் பங்களிப்பை மறந்துவிட்டதாக, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த குமார் மகள் விஜேதா, அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி உட்பட தலைவர்கள் துவக்கி வைக்கின்றனர்.
ஆனால், தன் தந்தையின் பெயர் எதிலும் குறிப்பிடவில்லை என அவரது மகள் விஜேதா வருத்தம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக, ‘டுவிட்டரில்’ அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
எனது தந்தை, 1987ல் அதிகாரபூர்வமாக பா.ஜ.,வில் இணைந்து, தனது கடைசி மூச்சு வரை கட்சிக்காக உழைத்தார். எந்த திட்டத்துக்கும், சாலைக்கும், ரயில் பாதைக்கும் அவர் பெயர் வைக்காமல் இருப்பது, அற்பமானது.
கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழும் அவரை, மறக்கும் கட்சி, சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.