தமிழ் சினிமாவில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. இளையராஜா இசையில் வைரமுத்துவின் வரிகளில் உருவான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாயின.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Vijay: வாவ்… மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து தானே தோசை சுட்ட விஜய்… தீயாய் பரவும் வீடியோ!
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்கள், அறிமுக நடிகர்கள், வளரும் நடிகர்கள், சிறு பட்ஜெட் படங்கள் என பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார் வைரமுத்து. கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், எழுத்தாளர் என பல முகங்களுடன் கோலொச்சி வரும் வைரமுத்து ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.
இதுவரை 7500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து, 7 முறை தேசிய விருது பெற்றுள்ளார். மேலும் பத்ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளையும் வென்றுள்ளார் வைரமுத்து. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள வைரமுத்து நாட்டு நடப்பு, உலக நடப்பு குறித்தும் தனது ஸ்டைலில் அக்கறையுடன் டிவிட்டி வருகிறார்.
Ajith: ஏகே 62வ விடுங்க… 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் காதல் காவியம்!
இதேபோல் சினிமா பிரபலங்களின் பிறந்த நாள், நினைவு நாள் போன்றவற்றின் போதும் அவர்களை வாழ்த்தவும் நினைவு கூறவும் தவறுவதில்லை கவிஞர் வைரமுத்து. இந்நிலையில் மறைந்த கவிஞர் வாலியை நினைவு கூர்ந்து உருக்கமாக டிவிட்டியுள்ளார் வைரமுத்து.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
கமல் இருக்கும் வரை
ரஜினிக்கும்
ரஜினி இருக்கும் வரை
கமலுக்கும்
விஜய் இருக்கும் வரை
அஜித்துக்கும்
அஜித் இருக்கும் வரை
விஜய்க்கும்
ஒரு பிடிமானம் இருக்கும்
எனக்கிருந்த பிடிமானத்தைப்
பிய்த்துக்கொண்டு
போய்விட்டீர்களே
வாலி அவர்களே
காற்றில் கத்தி சுற்றிக்
கொண்டிருக்கிறேன்
Biggboss Akshara Reddy: ஸ்பிரீங் ஹேர்… ட்ரான்ஸ்ப்ரண்ட் டிரெஸ்… அதகளப்படுத்தும் அக்ஷரா!
வைரமுத்துவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவருடைய பண்பை பாராட்டி வருகின்றனர். மேலும் காற்றில் அவர் பாடல்களின் வழியே உங்களுக்கு பிடிமானமாய் இருக்கிறார் காவியக் கவிஞர் வாலி! நானிருந்து எழுத வேண்டிய பாடல்களை நீங்கள் எழுதுங்கள் என காற்றில் கரைந்தார்.அவர் இல்லாத வெறுமையை உங்கள் பாடல்களும்;படைப்புகளும் பன்மடங்கு பூர்த்தி செய்யும் என பலரும் வைரமுத்துவுக்கு நெகிழ்ச்சியுடன் ஆறுதல் கூறி வருகின்றனர்.