கனடாவில் பட்டப்பகலில் கனேடியர் ஒருவரை இந்திய வம்சாவளியினர் ஒருவர் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வான்கூவரில், Starbucks cafe ஒன்றின் முன் பட்டப்பகலில் கனேடியர் ஒருவரை கத்தியால் குத்திக்கொன்றார் இந்திய வம்சாவளியினர் ஒருவர்.
கொல்லப்பட்டவர் பெயர் Paul Stanley Schmidt (37) என்றும், அவரைக் கொலை செய்தவர் பெயர் Inderdeep Singh Gosal (32) என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்தர்தீப் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேறு சில விடயங்களும் கவனம் ஈர்த்துள்ளன.
அதாவது, ஒருவர் குத்திக்கொலை செய்யப்படும்போதும் அருகிலுள்ள ஒருவர் காபி அருந்திக்கொண்டிருப்பதையும், வீடியோ எடுப்பவர் வர்ணனை செய்துகொண்டிருப்பதையும் வீடியோவில் காணவும் கேட்கவும் முடிகிறது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணியளவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.