சான்பிரான்சிஸ்கோ, ஒட்டாவா நகரங்களில், இந்திய தூதரகங்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகம் மீதான தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியினர் ஒருவித அச்ச உணர்வில் இருப்பதாக, வாஷிங்டனில் செய்தியாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் பட்டேல், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் வன்முறையை கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது என்றார்.
ஒருநாட்டில் தூதரகப்பணிகளை மேற்கொள்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வியன்னா ஒப்பந்தப்படி, அமெரிக்காவிலுள்ள தூதரகங்கள் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி
செய்ய, பைடன் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.