திருவள்ளூரில் தனியார் ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தியெடுத்து, உடல்நிலை பாதித்து உயிரிழந்த நிலையில், கட்டான உடலை பெறுவதற்காக ஸ்டீராய்டு மருந்தை ஊசி மூலம் அதிக அளவில் செலுத்திக் கொண்டதால் இரண்டு கிட்னியும் பாதித்து பலியானது தெரிய வந்துள்ளது.
நெமிலிச்சேரியை சேர்ந்த சவரிமுத்து என்கிற 25 வயதான ஆகாஷ் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதையடுத்து, மார்ச் 26 அன்று நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள கடுமையான பயிற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் 22ஆம் தேதி அன்று ரத்த வாந்தியெடுத்ததையடுத்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 5 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.