மதுரை: மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக் கோரிய வழக்கில் காவல் ஆணையர் பதில் தர உத்தரவு அளித்துள்ளனர். காவல் நிலைய கட்டடம் 115 ஆண்டுகள் பழமையானது என்பதால் மனிதர்கள் வாழ தகுதியற்றது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். மிகவும் பழமையான கட்டிட்டம் என்பதால் எந்நேரமும் இடிந்து விழும் அபாயமும் உள்ளது.
ஆங்காங்கே கட்டிடத்தின் தூண்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏதேனும் சின்ன பொருட்கள் வைத்து இடித்தாள் கூட இடிந்து விழும் நிலையில் தெப்பக்குளம் காவல் நிலையம் உள்ளது. இந்நிலையில் அந்த பழமையான கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுகோள் வைத்துள்ளனர். அதேபோல புதிய இடமாற்றம் செய்யும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காவல் நிலைய கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டாலோ, உயிரிழப்பு நிகழ்ந்தாலோ காவல்துறை பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மதுரை காவல் ஆணையர் தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கு ஏப்ரல் 10-க்கு ஒத்திவைத்துள்ளனர்.