ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் பெண் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்க (இணைத்தல், கற்றல் மற்றும் முன்னேறுதல்) நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய உறுப்பினரும், நடிகையுமான கெளதமி, மற்றும் அச்சு, மின்னணு, ஊடக துறையை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
Smt. Kanimozhi Karunanidhi, Member of Parliament being received by officials from @pibchennai in Special Media Workshop for Women in Media at JP hotel, Koyambedu, Chennai.@ianuragthakur @Murugan_MoS @MIB_India @PIB_India @KanimozhiDMK @airnewsalerts @DDNewslive pic.twitter.com/z2TsZs2e9e
— PIB in Tamil Nadu (@pibchennai) March 29, 2023
அப்போது நிகழ்வில் கனிமொழி எம்.பி.பேச்சு., பத்திரிக்கையாளர்கள் துறையில் அடிப்படை வசதிகள் கூட பெண்களுக்கு இல்லாமல் இருந்த நிலையில் இருந்து இன்று பெண் பத்திரிக்கையாளர்கள் தொடர்பாக பயிலரங்கம் வரை வந்துள்ளோம்.
திருமதி. கனிமொழி கருணாநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் சென்னையில் @pibchennai சார்பில் நடைபெற்ற பெண் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு கருத்தரங்கில் உரையாற்றினார்.@ianuragthakur @Murugan_MoS @MIB_India @PIB_India @airnewsalerts @DDNewslive @KanimozhiDMK @DG_PIB pic.twitter.com/9x6eFAdOKt
— PIB in Tamil Nadu (@pibchennai) March 29, 2023
எந்த துறையை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் ஒரு முரன்பாடான கருத்தை அந்த பெண் முன்வைக்கும்பொழுது அதன் கீழே வரக்கூடிய கமெண்டுகள் என்ன என்பதை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள். ஒரு ஆண் எப்படி தன்னை பற்றிய கருத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு போகிறார்களோ, அதேபோல் பெண்ணும் ஒதுக்கி தள்ளிவிட்டு போக வேண்டும். ஆனால் அதற்கான சூழ்நிலையை சமுதாயம் ஏற்படுத்தி கொடுத்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இந்த சமூகம், குடும்பம் நம்மிடம் எதிர்பார்க்க கூடிய விஷயங்கள் என்பது முற்றிலும் மாறுபட்டது என்ற அவர், உலக அளவில் 73% பெண் பத்திரிக்கையாளர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்றார்.