நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். சமீபத்தில் தனது வீட்டின் லாக்கரில் இருந்த தங்க வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போனதாக போலீஸில் புகார் அளித்தார். மேலும் தனது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார் ஐஸ்வர்யா.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
‘நான் மாறிவிட்டேன்’ சமந்தா உருக்கம்!
இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரியை பிடித்து விசாரித்தனர் போலீசார். அதில் கடந்த 4 ஆண்டுகளாக டிரைவர் வெங்கடேசனின் உதவியுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லாக்கரில் இருந்த நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும் திருடிய தங்க வைர நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மயிலாப்பூரில் உள்ள நகைக் கடையில் விற்றதையும் ஒப்புக்கொண்டார் ஈஸ்வரி.
மேலும் நகைகளை திருடி விற்ற பணத்தில் பணிப்பெண் ஈஸ்வரி, சென்னை சோழிங்கநல்லூரி ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. தனது கணவருக்கு கூட தெரியாமல் இந்த திருட்டு வேலையை அரங்கேற்றிய ஈஸ்வரி, இந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு சொந்தமானது என்றும் தான் ஐஸ்வர்யாவின் பினாமி என்றும் கூறி நம்ப வைத்துள்ளார்.
Vairamuthu: காற்றில் கத்தி சுற்றிக் கொண்டிருக்கிறேன்… வைரமுத்து உருக்கம்!
தொடர்ந்து ஈஸ்வரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில நகைகளை திருடி வீட்டில் பதுக்கி வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரிடம் இருந்தும் 100 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர வெள்ளி மற்றும் வைர நகைகளும் மீட்கப்பட்டன.
ஈஸ்வரி 9 லட்சம் ரூபாய் மதிப்பில் நிலம் வாங்கி போட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதோடு கணவருக்கு காய்கறி கடை, மகளுக்கு மளிகை கடை வைத்துக் கொடுத்திருப்பதுடன் இன்னொரு மகளுக்கு திருமணம் செய்து வைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தனது வீட்டில் இரண்டு போர்ஷன்களை வாடகைக்கு விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
Ajith: ஏகே 62வ விடுங்க… 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அஜித்தின் காதல் காவியம்!
இதனிடையே ஐஸ்வர்யா தனது புகாரில் கூறியதை விட அதிக அளவு நகைகள் ஈஸ்வரியிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யாவின் லாக்கரில் இருந்த நகைகள் எவ்வளவு என்பது குறித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து தனது நகைகளை அடையாளம் காண ஐஸ்வர்யா தனது சகோதரியின் திருமணத்தில் எடுத்த போட்டோ ஆல்பத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
Vijay: வாவ்… மனைவி சங்கீதாவுடன் சேர்ந்து தானே தோசை சுட்ட விஜய்… தீயாய் பரவும் வீடியோ!
இந்நிலையில் திருடப்பட்ட நகைகள் விசாரிக்க ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசனை கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர் போலீசார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடப்பட்ட நகைகள் மொத்தம் எவ்வளவு என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.