கர்நாடக மாநிலம் சிக்கோடியில் 29 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான கள்ளநோட்டு வழக்கில் 24 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாத சிவகாசியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சிக்கோடி பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் சிவகாசியை சேர்ந்த ரவி, பாண்டியன், மகேந்திரன் ஆகியோர் வேலை செய்துபோது, 1994 ஆம் ஆண்டில் அங்கு கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட கும்பலுடன் தொடர்புடையதாக கைது செய்துள்ளனர்.
5 ஆண்டுகள் தொடர்ந்து விசாரணைக்கு வந்த அவர்கள், 24 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தையடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.