தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயண சலுகைகளை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைகள் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அதில், முக்கியமாக அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு பயணச் சலுகை அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணிக்கும் பணிகளுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இளைஞர்களுக்கு வர்த்தக வாய்ப்புகளும் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ஒரு முக்கிய அறிவிப்பையும் அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 42 சேவைகளை இணைய வழியில் பெறலாம் என்ற அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
* சென்னை ஆவடி பேருந்து பணிமனை பேருந்து நிலையம் 10.76 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.
* உங்கள் தொகுதிகள் முதல்வர் திட்டத்தின் கீழ் குன்னத்தில் 3.55 கோடி ரூபாயில் புதிய பேருந்து பணிமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்புகளையும் அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.