மதுரை: மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக்கோரிய வழக்கில் காவல் ஆணையர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் நிலைய கட்டடம் 115 ஆண்டுகள் பழமையானது என்பதால் மனிதர்கள் வாழ தகுதியற்றது என மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். புதிய இடம் மாற்றம் செய்யும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டாலோ, உயிரிழப்பு நிகழ்ந்தாலோ காவல்துறை பொறுப்பு ஏற்க வேண்டும். மதுரைக காவல் ஆணையர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.