ஈரோடு மாவட்டத்தில் தந்தை கண் முன்னே காவிரி ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் கரட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் புவனேஷ் (17) தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாததால் சொந்த ஊருக்கு வந்திருந்த புவனேஷ், கடந்த மூன்று நாட்களாக தந்தையுடன் சோலார் அருகே பரிசல் துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்து வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று காலையும் வழக்கம் போல் தந்தையுடன் புவனேஷ் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக புவனேஷ், ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக தந்தை கண்முன்னே உயிரிழந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த புவனேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.