லாகூர்: பாகிஸ்தான் மக்களின் பிரதான உணவான, கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இயற்கை சீற்றம், உணவு தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்னைகள் பாகிஸ்தானை நெருக்கடியில் தள்ளியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசியப்பொருட்கள் விலை கடுமையாக ஏறியுள்ளது. பாகிஸ்தானில் ஒரு கிலோ அரிசி 350 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆரஞ்ச், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களின் விலையும் கிலோவிற்கு 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் […]