அரியலூர் மாவட்டத்தில் உள்ள அயன் தத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமசாமி-அசலாம்பாள் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் லலிதா கடந்த 25 ம் தேதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு உதவியாக தாய் அசலாம்பாள் இருந்து வந்தார்.
அப்போது அசலாம்பாள் தனக்கு தானே பேசிக்கொண்டும், சற்றும் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த அசலாம்பாள் மருமகன் சிலம்பரசன் தனது மாமனார் ராமசாமியிடம் மருத்துவமனைக்கு வந்து அசலாம்பாளை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரண்டு பெண் ஊழியர்கள் மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்வதற்காகச் சென்றுள்ளனர். அப்போது ஒரு குளியலைறையின் கதவு மட்டும் நீண்ட நேரமாகத் திறக்காமல் இருந்துள்ளது.
சிறிது நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால், ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு துணிகளை தொங்க விடும் கம்பியில் அசலாம்பாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட படி தொங்கியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அசலாம்பாள் குடும்பத்தினருக்குத் தகவல் அளித்தனர். அதன் படி விரைந்து வந்த அவர்கள் அசலாம்பாளைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அதன் படி போலீசார் விரைந்து வந்து அசலாம்பாள் மன நலம் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா?. அல்லது மகளுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.