எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
வெற்றிமுகம் சில ஆண்டுகளுக்கு முன்பு இனி சிம்பு அவ்வளவுதான் என ஒரு சிலர் பேசி வர அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தன் தோற்றத்தை மாற்றி முற்றிலும் மாறுபட்ட சிம்புவாக உருவெடுத்தார். அதன் பிறகு மாநாடு, வெந்து தணிந்தது காடு என தொடர் வெற்றிகளை கொடுத்து தான் யார் என நிரூபித்தார் சிம்பு. மேலும் ஒருசிலர் இனி படவாய்ப்புகள் இல்லாமல் சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் செல்லவேண்டும் என அவரை ட்ரோல் செய்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாகவே சிம்பு மாறி அந்த ட்ரோல்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார். இதைத்தொடர்ந்து தற்போது பத்து தல படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய காத்துக்கொண்டிருக்கிறார் சிம்பு
செம லைன் அப் சிம்பு பத்து தல படத்திற்க்கு பிறகு ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் மிகப்பிரம்மாண்டமான படத்தில் நடிக்கயிருக்கின்றார். இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். தற்போது இப்படத்தை பற்றிய பேச்சு தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து சிம்பு மேலும் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார். எனவே எல்லாம் கைகூடும் பட்சத்தில் சிம்புவின் லைன் அப் வெறித்தனமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
நிராகரிப்பு சிம்பு தன் திரைவாழ்க்கையில் பல வெற்றிப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளார். அதில் ஒன்று தான் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம். சில ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் சிம்புவை நடிக்க வைக்க முயற்சித்தார். ஆனால் சில பல காரணங்களால் சிம்புவால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போனது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்தார் சிம்பு. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும் பொன்னியின் செல்வன் போன்ற ஒரு மிகப்பிரமாண்டமான படத்தில் அதுவும் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை சிம்பு நழுவவிட்டது அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமான விஷயமாகவே இருந்து வந்தது
செம ரெஸ்பான்ஸ் இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் நடிகர் சிம்புவும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதையடுத்து இவ்விழாவிற்கு வருகை தந்த சிம்புவை பார்த்து அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இப்படத்தில் நடித்த நடிகர்களை காட்டிலும் சிம்பு மேடையில் ஏறும்போது ரசிகர்கள் அவரை கொண்டாடி தீர்த்தனர். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. என்னதான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாலும் அப்படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராக வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் சிம்பு. இதுவும் ஒரு தனி கெத்து தானே