வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெர்லின்: ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது.
மோடி எனும் சாதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, ராகுல் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவின் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிக்கு, எதிராக முதன்முறையாக விதிக்கப்பட்ட தீர்ப்பு பற்றி நாங்கள் கவனித்து வருகிறோம். அவரது, பார்லி., எம்.பி. பதவி முடக்கம் பற்றியும் கவனம் கொண்டுள்ளோம்.
நாங்கள் அறிந்த வரை, இந்த தீர்ப்புக்கு எதிராக ராகுல் மேல்முறையீடு செய்வார் என தெரிகிறது. அதன்பின்னர், இத்தீர்ப்பு நிலையானதொன்றா? என்றும், அவரது பதவி முடக்கம், ஏதேனும் ஓர் அடிப்படையில் உள்ளதா? என்பது பற்றி தெரிய வரும். இந்த விஷயத்தில், நீதிமன்ற சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கொள்கைகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement