கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு


உள்ளூர் கல்வித் துறைக்கான STEAM கல்வியைத் தொடங்குவதற்கான உத்தியோகபூர்வ வேலைத்திட்டம் நாளை(31.03.2023) மேல் மாகாணத்தில் கொழும்பு, நகர மண்டபத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை கூறியுள்ளார்.

புதிய வேலைத்திட்டம்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Steam Education System Start In Sri Lanka

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,STEAM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம்) கல்வியைத் தொடங்குவதற்கான வேலைத்திட்டம் நாளை காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.30 வரை தொடரும்.

முக்கிய நிகழ்வை ஒட்டி,எஞ்சிய மாகாணங்களில் உள்ள எட்டு மையங்களில் ஒரே நேரத்தில் ஜூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

தற்போதைய கல்வி முறை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை ஆகிய இரண்டும் அறிவியல் அல்லது தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல.

இரண்டாம் தொழில் புரட்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் மூன்றாவது தொழில் புரட்சிக்கு பின்னர் நாட்டின் கல்வி முறை மாறவில்லை.நான்காவது டிஜிட்டல் புரட்சிக்கு நாம் தயாராக வேண்டும்.

கல்வி முறையில் சீர்திருத்தங்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Steam Education System Start In Sri Lanka

பல பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டன.ஆனால் அரசாங்கங்களால் கல்வி முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வர முடியவில்லை.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் STEM கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக எங்களிடம் அது இல்லை.

எதிர்காலத்தில் நாட்டின் கல்வி முறை இந்த பகுதியில் மாற்றங்களைக் காணும்.

கல்வி முறைக்கு கலை மற்றும் சமூக ஆய்வுகளை சேர்க்கும் அதே வேளையில் STEAM கல்வியில் கலை பாடங்களை சேர்க்க அமைச்சு தீர்மானித்துள்ளது.”என கூறியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.