தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் மிட்டாய் வாங்கித் தருவதாகக்கூறி அழைத்துச்சென்று 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஊர்மேலழகியான் கிராமத்தை சேர்ந்த 22 வயதான மாணிக்கம் என்பவன், சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று வன்கொடுமை செய்துள்ளான். அழுதுகொண்டு வந்த சிறுமியிடம் விசாரித்த அப்பகுதி மக்கள், மாணிக்கத்தை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் தன்னை தாக்கியதாகக் கூறியதால், மாணிக்கம் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.
இதனை அறிந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மாணிக்கத்தை போக்சோ
சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர்.