சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையம் பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து பேருந்து நிலையமாக மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்நோக்கு வசதி வளாகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பல அடுக்கு வாகன நிறுத்தம், வணிக வளாகம் மற்றும் கடை நிலை இணைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.