தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இந்நிலையில் கடந்த வாரம் நடிகர் அஜித்தின் அப்பா பி சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த 3 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியத்திற்கு குடும்பத்தினர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் வழங்கி வந்தனர்.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலரும் அஜித் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஜித்தின் வீட்டிற்கு நேரில் அவரது தந்தை உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Pathu Thala Review: சிம்புவின் பத்து தல படம் எப்படி? விமர்சகர்களின் அதிரடி விமர்சனம்!
இதேபோல் நடிகர் விஜய் அஜித்தை நேரில் சந்தித்து தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறினார். சினிமா பிரபலங்கள் பலரும் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்ற அஜித் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வந்தனர். அஜித் தந்தையின் அஸ்தி ஈசிஆர் கடலில் கரைக்கப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்தார்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி, தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்று ஆறுதல் கூறினார். அப்போது பேசிய நடிகர் அஜித், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
PathuThala: இதான் ஹெலிகாப்டர்ல வர்றதா? மரண பங்கமாகும் கூல் சுரேஷ்!
எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து கூறியதை கேட்ட அவரது ஆதரவாளர்கள் குஷியாகி உள்ளனர். நடிகர் அஜித் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். ஜெயலலிதா மறைந்த செய்தியை அறிந்த வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய அஜித் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
Gautham Karthik: என் பொண்டாட்டி குண்டா இருந்தா உங்களுக்கு என்ன? கடுப்பான கவுதம் கார்த்திக்!
நடிகர் அஜித்தின் 62வது படமான ஏகே 62 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து வந்தனர் ரசிகர்கள். ஆனால் அஜித்தின் தந்தை மறைவால் ஏகே 62 படம் குறித்த அறிவிப்பு தள்ளி போகும் என கூறப்படுகிறது. முன்தாக ஏகே 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் படத்தின் கதை விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும் மகிழ் திருமேனிதான் ஏகே 62 படத்தை இயக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.