சென்னை: சென்னையில் பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர் மக்களை ரோகிணி தியேட்டருக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் இன்று (மார்ச் 30 ) தமிழகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில், இன்று (மார்ச் 30 ) இந்தப் படம் பார்ப்பதற்கு, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு வந்த நரிக்குறவர் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திரையரங்கு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘பத்து தல’ படம் யு\ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் முதலில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் பிறகு அவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்” என்று விளக்கம் அளித்துள்ளனர்.