கணவனுடன் தேனிலவுக்குச் சென்றிருந்த ஒரு கர்ப்பிணிப்பெண், மலை உச்சியிலிருந்து விழுந்த சம்பவத்தில், அவருடைய கணவர் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நடந்தது என்ன?
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur’s Seat என்ற மலைக்கு சென்றிருந்தார் ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31).
பின்னர் அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. அவரது வயிற்றிலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டிருந்தது.
இந்நிலையில், ஹவ்ஸியாவின் கணவர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Image: Yasmin Javed / SWNS
உடற்கூறு ஆய்வில், தாக்கப்பட்டதற்கு ஆதாரமாக ஃபவ்ஸியாவின் உடலில் பல அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அன்வர்தான் அவரை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒருமுறை, அன்வர் ஃபவ்ஸியாவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியதுடன், அவரது முகத்தில் பலமுறை குத்தியதாகவும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
எதனால் பிரச்சினை?
அன்வரும் ஃபவ்ஸியாவும், 2019ஆம் ஆண்டு ஆகத்து மாதம் காதலிக்கத் துவங்கி, 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிச்சயம் செய்யப்பட்டு, அதே ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள்.
Image: Fawziyah Javed
ஆனால், சீக்கிரமாகவே தம்பதியருக்குள் பிரச்சினைகள் உருவாக, பலமுறை ஃபவ்ஸியாவைத் தாக்கியிருக்கிறார் அன்வர்.
ஃபவ்ஸியா கணவனை பிரிய திட்டமிட, அவரையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளார் அன்வர். தன்னை விவாகரத்து செய்ய ஃபவ்ஸியாவை அனுமதிக்கமாட்டேன் என்றும், தானும் அவரை விவாகரத்து செய்யமாட்டேன் என்றும், ஃபவ்ஸியாவை இன்னொருவருடன் வாழவிடமாட்டேன் என்றும் மிரட்டியுள்ளார் அன்வர்.
Image: PA
அத்துடன், ஒருமுறை, ஃபவ்ஸியாவின் வங்கிக்கணக்கிலிருந்து 12,000 பவுண்டுகளை அவரிடம் சொல்லாமலே எடுத்து தன் கணக்கில் சேர்த்துக்கொண்டுள்ளார் அன்வர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, செப்டம்பர் 1ஆம் திகதி, அதாவது, ஃபவ்ஸியா கொல்லப்படுவதற்கு முந்தைய நாள், எடின்பர்கில் உள்ள ஹொட்டல் ஒன்றிற்கு தம்பதியர் சென்றிருந்த நிலையில், மனைவியை மோசமாக நடத்திய அன்வர், அவரை அச்சுறுத்தியதாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கொலைக்குற்றச்சாட்டுகள் பதிவு
ஃபவ்ஸியாவை மலையிலிருந்து தள்ளிவிட்டதாகவும், கர்ப்பிணியான அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்ததாகவும், அவரது வயிற்றிலிருந்த குழந்தையின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாகவும் அன்வர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணை துவங்கியுள்ள நிலையில், அது ஏப்ரல் 14ஆம் திகதி வரை நீடிக்கலாம் என்றும், அதைவிட அதிக நேரம் தேவைப்பட்டால், ஏப்ரல் 19ஆம் திகதி வரை வழக்கு விசாரணையை நடத்த இருப்பதாகவும், நீதிபதி Lord Beckett தெரிவித்துள்ளார்.
Image: Ben Lack Photography Ltd