துப்பாக்கிகளுடன் தனுஷ் பட இயக்குனர் : வைரலான புகைப்படம்
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது உதவி இயக்குனர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவில் அனைவரும் துப்பாக்கியுடன் உள்ளனர். இந்த படத்தில் தனுஷ் உள்ளிட்ட ஏராளமான துணை நடிகர்கள் துப்பாக்கி வைத்திருப்பது போன்று தான் கதையே அமைந்துள்ளது. அதனால் சினிமாவிற்காக தயாரிக்கப்பட்ட டம்மி துப்பாக்கிகளுடன் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினர் போஸ் கொடுத்தனர்.