தெலுங்கில் 1973ம் ஆண்டு வெளியான ராம ராஜ்ஜியம் என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் நடிகராக அடியெடுத்து வைத்தவர் சரத்பாபு. பின் 1977ம் ஆண்டு பட்டிய பிரவேசம் என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான நிழல் நிஜமாகிறது படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவில் பிரபலமானார் சரத்பாபு.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
PathuThala: இதான் ஹெலிகாப்டர்ல வர்றதா? மரண பங்கமாகும் கூல் சுரேஷ்!
தொடர்ந்து தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். சரத்பாபு ஹீரோவாக நடித்த படங்களை காட்டிலும் இரண்டாவது ஹீரோவாக நடித்த படங்கள் செம்ம ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடித்த அண்ணாமலை மற்றும் முத்து திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
Pathu Thala: நரிக்குறவர் மக்களை அனுமதிக்க மறுப்பா? குவியும் கண்டனங்கள்.. ரோகிணி தியேட்டர் விளக்கம்!
சரத்பாபு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்துள்ளார். கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார் சரத்பாபு. நடிகர் சரத்பாபு இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சரத்பாபு இரண்டு முறை திருமணம் செய்து இரண்டிலும் தோல்வியை சந்தித்தார்.
1974 ஆம் ஆண்டு நடிகை ரமா பிரபாவை திருமணம் செய்தார் சரத்பாபு. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1988ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர் நடிகர் நம்பியாரின் மகளான சினேகா நம்பியாரை 1990ஆம் ஆண்டு திருமணம் செய்தார் சரத்பாபு. ஆனால் அவரையும் 2011ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
Pathu Thala Review: சிம்புவின் பத்து தல படம் எப்படி? விமர்சகர்களின் அதிரடி விமர்சனம்!
தற்போது 71 வயதாகும் சரத்பாபு சினிமாவில் இருந்து விலகி ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் நடிகர் சரத்பாபு திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சரத்பாபு ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார்.
தூர்தர்ஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சேனல்களிலேயே ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். இதேபோல் சன்டிவி மற்றும் ஜெயா டிவியிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார் சரத்பாபு. கடைசியாக வசந்த முல்லை படத்தில் நடித்தார் சரத்பாபு. தற்போது அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.
Gautham Karthik: என் பொண்டாட்டி குண்டா இருந்தா உங்களுக்கு என்ன? கடுப்பான கவுதம் கார்த்திக்!