விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு கலைக்கப்படுவதாக பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது விருதுநகர் மாவட்ட ஆவின் நிர்வாக குழு அமைக்கப்பட்டது. பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் காரணமாக விருதுநகர் ஆவின் நிர்வாகம் கலைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவின் நிறுவனதிற்கு தலைவர் துணை தலைவர் உள்ளிட்ட 17 உறுப்பினர்களை கொண்ட நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. 2020-21-ம் ஆண்டு 2 மேலாளர், பால் பதப்படுத்துதல், பண்ணை வேதியலாளர், நுண்ணுயிரியலாளர், ஊழியர்கள், அலுவலக உதவியாளர் என 25 பணியிடங்கள் நிரப்பப்பட்டது.
அப்போது நிரப்பப்பட்ட 25 பணியிடங்களும் முறைகேடாக நிரப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்த ஜூலை 27-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில், பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் கடந்த மார்ச் 16-ம் தேதி விருதுநகர் ஆவின் நிர்வாக குழுவை ஒட்டுமொத்தமாக களைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆவின் நிறுவன தலைவர் தனி அலுவலராக இன்று பொறுப்பேற்கவுள்ளார்.