அதிமுக – பாஜக கூட்டணியில் தொடர் சலசலப்புகள் நீடித்து வந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் முக்கியமான விஷயத்தை முன்வைத்துள்ளார். அதாவது, பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் எனத் தெரிவித்தார். இதன்மூலம் பாஜகவின் தேசிய தலைமையே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது எனப் புரிந்து கொள்ளலாம். இனி மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா வியூகம் எதுவும் எடுபட வாய்ப்பில்லை.
அண்ணாமலை எச்சரிக்கை
அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்துவிட்டு தொண்டனாக இறங்கி வேலை செய்யவும் தயங்க மாட்டேன் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் தேசிய கட்சிக்கு அதன் தேசிய தலைமை தான் முடிவெடுக்க முடியும். அதை விட்டு விட்டு மாநிலத் தலைமையின் நிலைப்பாட்டை அங்கே திணிக்க முடியாது. இந்த சூழலில் அமித் ஷாவின் அறிவிப்பு கூட்டணி தொடர்வதை உறுதி செய்திருக்கிறது.
அதிமுக – பாஜக கூட்டணி
இதன் பின்னணியை சற்று ஆராய்ந்தால் கர்நாடக சட்டமன்ற தேர்தல் முக்கிய காரணம் என அரசியல் பார்வையாளர்கள் முன்வைக்கின்றனர். அங்கு மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இம்மாநிலத்தில் லட்சக்கணக்கான தமிழர்களின் ஓட்டு இருக்கிறது. சில இடங்களில் தமிழ் ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல்
தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜக, மீண்டும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என தீர்மானமாக இருக்கிறது. இது அக்கட்சிக்கு கவுரவப் பிரச்சினை மட்டுமின்றி 2024 மக்களவை தேர்தலுக்கும் முன்னோட்டமாக பார்க்கிறது. இந்நிலையில் அமித் ஷா பேசியது பற்றி தமிழக சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய
, ஆரம்பத்தில் இருந்தே சொல்வது தான்.
எடப்பாடி உறுதி
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது. வரும் மக்களவை தேர்தலை நோக்கி இதுவரை அப்படித்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் எனக் கூறினார். தமிழகத்தில் நிலவும் திமுக கூட்டணியை கர்நாடக தேர்தலில் ஒரு வியூகமாக காங்கிரஸ் முன்னெடுக்க வாய்ப்புள்ளது. இதேபோல் அதிமுக – பாஜக கூட்டணியும் எடுபட வாய்ப்புகள் இருக்கின்றன.
முக்கியமான கண்டிஷன்
இந்த இடத்தில் திமுக, அதிமுகவிற்கு கர்நாடகாவிலும் வாக்கு வங்கி இருப்பதையும் மறந்து விடக் கூடாது. அந்த வகையில் அமித் ஷாவின் அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக அதிமுக கூட்டணியை பாஜக விரும்புவதை பார்க்க முடிகிறது. இதைப் பயன்படுத்தி கொண்டு எடப்பாடி பழனிசாமி சில நிபந்தனைகளை விதிக்க வாய்ப்புள்ளது.
தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க மறைமுக அழுத்தம் தரக் கூடும். அதாவது, கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது. அடுத்து இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்க வழிவகை செய்வது. அதற்கு பாஜகவும் துணை நிற்க வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு பல்வேறு அரசியல் முடிச்சுகள் இந்த கூட்டணியின் பின்னணியில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.