அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு எப்போதும் இல்லையென அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்தார்.
சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அம்மா உணவங்களில் தரமான உணவு வழங்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அம்மா உணவகத்தில் உணவு தரமில்லை என ஆதாரத்துடன் சொன்னால் உறுதியாக நடவடிக்கை எடுப்போம், தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லையென கூறவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
அம்மா உணவகங்களை இந்த அரசு மூடி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குற்றஞ்சாட்டிய நிலையில், அம்மா உணவகங்களுக்கு இந்த ஆண்டு இருமடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நேரு பதிலளித்தார்.
சென்னையில் அம்மா உணவகம் மூலம் 15 கோடி ரூபாய் வருவாய் வந்த நிலையில், 129 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நேரு பதிலளித்தார்.