தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ₹.294 வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார். இதற்கு முன்பு 100 நாள் வேலை திட்டத்திற்கு ஒரு நாள் ஊதியமாக ₹.281 கொடுக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து சட்டப்பேரவையில் பெரியசாமி பேசியபோது, “தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு சுவர் கட்டப்படும் என்று தெரிவித்தார். மேலும், தொடந்து, தமிழகத்தில் 2500 ஊராட்சியில் இருக்கின்ற பள்ளிகளை சீரமைக்க 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
திமுக ஆட்சியில் இதுவரை நடந்த இரண்டு ஆண்டு காலத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2.16 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், ரூ. 190 கோடிகள் ஒதுக்கப்பட்டு 149 சமத்துவபுரங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.