சென்னை: சென்னை கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி சக மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை நடத்திய நிலையில் மாணவிகள் ஆவேசம் அடைந்தனர். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று கலாஷேத்ரா மாணவிகள் முழக்கம் எழுப்பியுள்ளனர்.