சென்னை: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ.50 கோடியில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 30) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் சென்னைக்கான அறிவிப்புகளின் விவரம்:
- சென்னை மாநகராட்சி பள்ளிக் கட்டடங்கள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் மீட்டெடுக்கப்பட்ட இடத்தில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புதிய சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.
- சென்னையில் 4 மண்டலங்களில் ரூ.20 கோடியில், நீர் நிலைகள் புனரமைக்கப்படும்.
- சென்னையில் 7 இடங்களில் ரூ.35 கோடியில் புதிய சமுதாய நலக் கூடங்கள் அமைக்கப்படும்.
- சென்னையில் 50 பூங்கா மற்றும் 10 விளையாட்டு திடல் ரூ.30 கோடியில் அமைக்கப்படும்.
- சென்னையில் புலியூர் கால்வாய் ரூ.14 கோடியில் புனரமைக்கப்படும்.
- சென்னையில் 15 இடங்களில் ரூ.25 கோடியில் நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படும்.
- தெல்காப்பியா பூங்கா ரூ.48 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- கூவம் ஆற்றில் 23 இடங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
- ரூ.40 கோடி மதிப்பீட்டில் புழல் மற்றும் சூரப்பட்டில் அமைந்துள்ள 300 MLD & 14 MLD குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் புனரமைக்கப்படும்.
- ரூ.20 கோடியில் 20 கி.மீ. நீளத்திற்கு கொளத்தூரில் கழிவுநீர் குழாய்கள் மேம்படுத்தப்படும்.
- ரூ.18 கோடியில், கொருக்குப்பேட்டையில் 10 MLD கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, 3 MLD மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி மற்றும் விடுபட்ட 25 தெருக்களுக்கு குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- சென்னை மாநகராட்சி பணிமனைகளில் ரூ.5 கோடியில் பிரதான கழிவுநீர் குழாய்கள் மேம்படுத்தப்படும்.
- சென்னை மாநகராட்சி ஈ.வி.கே. சம்பத் சாலையில் சாலையோர கழிவு நீரகற்று நிலையம் அமைக்கும் பணி மற்றும் புரசைவாக்கம் கழிவுநீரகற்று நிலையம் வரை உந்துகுழாய் பதிக்கும் பணி ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.