சென்னை: அரசு நிலத்திற்கான ரூ.31.09கோடி குத்தகை பாக்கியை சத்யா ஸ்டுடியோவிடம் வசூலிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மீட்கப்பட்ட அரசு நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீட்கப்பட்ட நிலத்தில் அரசு திட்டமிட்டபடி இணைப்பு பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. 1968ல் சத்யா ஸ்டுடியோவுக்கு குத்தகைக்கு தந்த 93,540 சதுரஅடி நிலத்தை 2008ல் அரசு எடுத்துக்கொண்டது. நிலத்தை மீண்டும் எடுத்த மயிலாப்பூர் வட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்ய கோரி சத்யா ஸ்டுடியோ வழக்கு தொடர்ந்தது.