எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்டோர் நடித்த பத்து தல படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.
பத்து தல படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறது. பத்து தல படத்தில் சிம்புவுக்கு ஜோடி கிடையாது. கன்னட படமான மஃப்டியின் ரீமேக் தான் இந்த பத்து தல.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
படத்தில் சிம்புவின் அறிமுக காட்சியிலேயே ரசிகர்கள் அசந்துவிட்டார்கள். சிம்புவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோதே தளபதி விஜய் வந்து Bloody Sweet என்று சொல்ல தியேட்டரே அதிர்ந்துவிட்டது.
பத்து தல படத்தின் இடைவேளையின் போது விஜய்யின் லியோ பட ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதை ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு சர்பிரைஸா என வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும் நடந்தது.
இதையடுத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தான் நடக்கவிருக்கிறது. விஜய்ணா எங்க அண்ணா என கூறுபவர் சிம்பு. இந்நிலையில் சிம்பு படத்தில் லியோ ப்ரொமோ வந்ததில் ஆச்சரியம் இல்லை.
பத்து தல படம் பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
இந்த படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான். சிம்புவின் நடிப்பு வேற லெவலில் இருக்கிறது. கெரியரில் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டார் சிம்பு. அவரை இப்படி பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. கவுதம் கார்த்திக்கின் நடிப்பு அருமை என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பத்து தல எதிர்பார்த்தது போன்று இல்லை, பத்தாத தலயாக இருக்கிறது என்றும் சிலர் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இருக்கும் ரோகிணி தியேட்டரில் பத்து தல படம் பார்க்க நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இரண்டு பேர் வந்தார்கள். அதை பார்த்த தியேட்டர் ஊழியர்கள் அந்த இருவரையும் உள்ளே விடமால் விரட்டினார்கள். நாங்க டிக்கெட் வச்சிருக்கோம் என்று அவர்கள் கூறியும் விரட்டினார்கள்.
இதை பார்த்து அங்கிருந்த சிம்பு ரசிகர்கள் தியேட்டர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
இந்த காலத்திலும் தீண்டாமை கொடுமையா என்று சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே டிக்கெட் வைத்திருந்த அந்த இரண்டு பேரையும் சரியான நேரத்திற்கு படம் பார்க்க உள்ளே அனுப்பி வைத்துவிட்டதாக ரோகிணி தியேட்டர் உரிமையாளரான நிகிலேஷ் சூர்யா தெரிவித்துள்ளார்.
பத்து தல படத்தை பற்றி விமர்சிப்பதை விட தற்போது தீண்டாமை கொடுமை பற்றி பலரும் பரபரப்பாக பேசி வருகிறார்கள். தியேட்டரில் நடந்த விஷயம் தெரிந்தால் சிம்புவே கொந்தளித்து அறிக்கை வெளியிடுவார். அந்த மனுஷன் படத்திற்கா இப்படி நடக்க வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
Pathu Thala: ஓமைகாட், ஹீரோயின் ப்ரியா பவானிசங்கரை விட குத்தாட்டம் போட்ட சயீஷாவுக்கு இவ்ளோ சம்பளமா!
பத்து தல படத்தில் ராவடி என்கிற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார் ஆர்யாவின் மனைவி சயீஷா. 5 நிமிடம் ஆடிவிட்டு போக சயீஷாவுக்கு ரூ. 40 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். படத்தின் ஹீரோயினான ப்ரியா பவானிசங்கருக்கு ரூ. 70 லட்சம் சம்பளமாம்.
பத்து தல படத்தில் சயீஷா குத்தாட்டம் போடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. குழந்தை பெற்ற பிறகு நடிக்காமல் இருந்த சயீஷா ராவடி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்.
Kamal Haasan:மணிரத்னத்தை பார்த்தால் பொறாமையா இருக்கு: கமல் ஹாசன்