சிம்புவின் ‘பத்து தல’ படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீசாகியுள்ள இந்தப்படத்தை பார்க்க வந்த நரிக்குறவர் சமுதாய மக்களை ரோகினி திரையரங்கம் அனுமதி மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வெற்றிக்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது ‘பத்து தல’ படம் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் வெளியாகி மெஹா ஹிட்டடித்த ‘மப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்காக ‘பத்து தல’ படம் உருவாகியுள்ளது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் சிம்பு நடித்துள்ளார். இவருடன் நடிகர் கெளதம் கார்த்திக் லீட் ரோலில் நடித்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள ‘பத்து தல’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிம்பு, கெளதம் கார்த்திக் உடன் ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன், கலையரசன், டிஜே, மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. சிம்பு மாஸ் காட்டியுள்ளதாகவும், கெளதம் கார்த்திக்கு இந்தப்படம் திருப்புமுனையாக அமையும் என படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘பத்து தல’ படத்தை பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கிற்கு நரிக்குறவர் சமுதாய மக்கள் வந்தனர். அவர்கள் டிக்கெட் வைத்திருந்தும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் படு வைரலானது. குறிப்பாக டிக்கெட் பரிசோதகர் நரிக்குறவர் சமுதாய மக்களிடம் காட்டிய உடல்மொழி கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
Pathu Thala Review: சிம்புவின் ‘பத்து தல’ கெத்து தல ஆனதா.? இல்லையா.?: ட்விட்டர் விமர்சனம் இதோ.!
இந்த விவகாரம் இணையத்தில் பெரிதாக வெடித்ததை தொடர்ந்து ரோகிணி திரையரங்கம் விளக்கம் ஒன்றை வெளியிட்டது. அதில் ‘பத்து தல’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் குழந்தைகளுடன் வந்த அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அதன்பின்னர் அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்தனர். ஆனாலும், யு/ஏ சான்றிதழ் பெற்ற படத்தை பெற்றோர்களுடன் குழந்தைகள் பார்க்கலாம் என்பது இவ்வளவு பெரிய திரையரங்கு நிர்வாகத்திற்கு தெரியவில்லையே எனவும் தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Actress Sana: ஒரு பெண் எப்படி ஆசைகளை கட்டுப்படுத்த முடியும்: அம்மா நடிகை பகீர் பேட்டி.!
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், அந்த சகோதரியும் சகோதரர்களும் பின் தாமதமாக அனுமதிக்கப்பட்டதாக விவரம் தெரிகிறது. எனினும் முதலில் அனுமதி மறுக்கப்பட்டதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது. கலைகள் அனைவருக்கும் சொந்தமானது என காட்டாமாக பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.