மதுரை மத்திய சிறைக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
மதுரை புது ஜெயில் சாலையில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் சுமார் 1,300 க்கும் மேற்பட்டோர் சிறை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். சிறை நிர்வாகமானது கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் அண்மையில் சிறை நூலகம் திட்டம் அங்கு கொண்டு வரப்பட்டது. கைதிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் அறிவுத்திறனை வளர்க்கக்கூடிய வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்காக பல்வேறு தரப்பினர் இலவசமாக புத்தகங்களை வழங்கி வந்தனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, சிறைத்துறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆயிரம் புத்தகங்களை நன்கொடையாக வழங்கி உள்ளார்.
சிறைக் கைதிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, இது கைதிகளை நல்வழிப்படுத்தும் என்று கூறியுள்ளார். தற்போது, உசிலம்பட்டி பகுதியில் சினிமா ஷூட்டிங்கில் இருக்கும் அவர் முதல் கட்டமாக 1000 புத்தகங்களை வழங்கி உள்ளார்.
வரும் நாட்களில் இன்னும் அதிக புத்தகங்களை சிறைக்கு வழங்க உள்ளதக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். சிறைத் துறை அதிகாரிகளின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த அவர், இத்திட்டம் வெற்றி பெறவேண்டும் என்றார்.
newstm.in