நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா கொள்ளை அடிக்கப்பட்ட நகை 60 சவரன் அல்ல, 200 சவரன் என காவல்துறையிடம் புதிதாக புகார் அளித்துள்ளார்.
ஐஸ்வர்யா வீட்டில் முதலில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் வேலைக்கார பெண்ணான ஈஸ்வரி வீட்டில் இருந்து 100 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டது .
இது தொடர்பாக ஐஸ்வர்யாவிடம் காவல்துறையினர் கூடுதல் விவரங்களை கேட்டிருந்தனர். வீட்டில் கொள்ளை போன நகைகள் எவ்வளவு என்பதை முழுமையாக ஆய்வு செய்து தகவல் தெரிவிக்குமாறு கூறினர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா புதிய புகார் ஒன்றை போலீசில் அளித்துள்ளார். அதில் தனது வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை போனதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர்.
ஐஸ்வர்யாவின் வீட்டிலிருந்து கொள்ளை போன 100 சவரன் நகை ஏற்கனவே கைப்பற்றப்பட்ட நிலையில், அதன்பிறகு விசாரணை மேற்கொண்டதில் மேலும் 43 சவரன் நகை கைப்பற்றப்பட்டது. ஏற்கனவே 143 சவரன் நகைகள் கைப்பற்ற நிலையில் தற்போது புதிய புகாரை ஐஸ்வர்யா அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
newstm.in