7 ஆயிரம் டொலருக்கு மேல் SWIGGYயில் இட்லி ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர் !


இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 7 ஆயிரம் டொலருக்கு மேல் SWIGGYயில் இட்லி ஆர்டர் செய்து சாப்பிட்டதாக வாடிக்கையாளரின் தரவை SWIGGY நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலக இட்லி தினம்

இந்தியாவின் முன்னணி உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி நிறுவனமான SWIGGY உலக இட்லி தினத்தை முன்னிட்டு சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பிரபலமான உணவாக இட்லி இருப்பதாக SWIGGY தெரிவித்துள்ளது.

7 ஆயிரம் டொலருக்கு மேல் SWIGGYயில் இட்லி ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர் ! | Swiggy Customer Ordered Idli Worth 7000 Dollar@gettyimages

மேலும் கடந்த ஆண்டு மட்டும் 33 மில்லியன் அளவிற்கு இட்லிகள்  விற்கப்பட்டுள்ளதாக தரவுகள் வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நபர் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7000 டொலருக்கும் மேல் இட்லி SWIGGYயில் இட்லி ஆர்டர் செய்துள்ளார்.

7 ஆயிரம் டொலருக்கு மேல் SWIGGYயில் இட்லி ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர் ! | Swiggy Customer Ordered Idli Worth 7000 Dollar@gettyimages

7000 டாலருக்கும் மேல் செலவு

Swiggy பகிர்ந்துள்ள தரவுகளின் படி, “கடந்த 12 மாதங்களில் 33 மில்லியன் தட்டு இட்லிகளை டெலிவரி செய்துள்ளது.

பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகியவை அதிகமாக இட்லிகளை ஆர்டர் செய்யும் முதல் மூன்று நகரங்கள் ஆகும்.

மும்பை, கோயம்புத்தூர், புனே, விசாகப்பட்டினம், டெல்லி, கொல்கத்தா மற்றும் கொச்சி ஆகியவை அதனை தொடர்ந்து வரும் மற்ற நகரங்கள் ஆகும். அந்த நபர் பயணம் செய்த பல்வேறு இடங்களிலிருந்தும் இட்லியை ஆர்டர் செய்துள்ளார்.

7 ஆயிரம் டொலருக்கு மேல் SWIGGYயில் இட்லி ஆர்டர் செய்து சாப்பிட்ட நபர் ! | Swiggy Customer Ordered Idli Worth 7000 Dollar@Shutterstock

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு SWIGGY பயனர் கடந்த ஆண்டு அதிகபட்சமாக இட்லிகளை ஆர்டர் செய்திருக்கிறார். இந்தியாவின் பாரம்பரிய உணவிற்காக அவர் 7000 டாலருக்கும் மேல் செலவு செய்துள்ளார்.

“பெங்களூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் பயணம் செய்யும் போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஆர்டர்கள் உட்பட அந்த நபர் ஓராண்டில் மட்டும் 8,428 தட்டு இட்லிகளை ஆர்டர் செய்துள்ளார்” என SWIGGY நிறுவனம் தெரிவித்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.