ராமநவமியை முன்னிட்டு மேற்குவங்காளம், குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது சலசலப்பு ஏற்பட்ட நிலையில், கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட சலசலப்பில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனையடுத்து, போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குஜராத்தின் வடோதரா பகுதியில் ராமநவமி ஷோபா யாத்திரையின் போது நிகழ்ந்த சலசலப்பின் போது இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து, போலீசார் தலையிட்டு கூட்டத்தை கலைத்தனர்.