பெங்களூரு: கர்நாடகாவில் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று முன்தினம் மண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற ‘மக்களின் குரல்’ பேரணியில் பங்கேற்றார்.
ஸ்ரீரங்கப்பட்டணா அருகே உள்ள பெவினஹள்ளியில் திறந்த பேருந்தில் நின்றவாறு சென்ற சிவகுமாரை மேளம் முழங்கியவாறு வரவேற்றனர். இதனால் உற்சாகம் அடைந்த சிவகுமார் 500 ரூபாய் நோட்டுகளை மேளக் கலைஞர்கள் மீது வீசினார். இந்த வீடியோ வைரலானது.
இதனை பாஜக, மஜத கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. கர்நாடக அமைச்சர் ஆர். அசோக் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.