சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அடையாறு கலாஷேத்ராவில் பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. கலாஷேத்ரா பெயரை கெடுக்க இதுபோன்று பொய்யான புகார்கள் தெரிவிக்கப்படுவதாக அந்த நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.
ஆனால் மாணவிகள் தீவிர போரட்டத்தை கையில் எடுத்ததை அடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து கல்லூரிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலியல் புகார் குறித்து நிர்வாகம் பேச தயாராக இல்லை என தெரிகிறது.
எனவே, மாணவிகள் உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தீர்க்கமாக உள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு பிறப்பித்த உத்தரவை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப்பெற்றது. கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என 4 பேர் குழு அறிக்கை அளித்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
newstm.in