தன் கணவன் தற்கொலை செய்துகொண்டதாக பெண் ஒருவருக்கு தகவல் கிடைத்த நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு, உண்மையில் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை, வேறொரு பெண்ணுடன் இரகசியமாக வாழ்க்கை நடத்தி வருகிறார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் அந்தப் பெண்.
கணவனுடைய பெற்றோர் கூறிய செய்தி
கலிபோர்னியாவைச் சேர்ந்த அனெஸ்ஸாவுக்கு (Anessa Rossii) அவரது கணவரான டிம் (Tim)உடைய பெற்றோரிடமிருந்து ஒரு செய்தி வந்துள்ளது.
Image: @anessarossii / TikTok
டிம் தற்கொலை செய்துகொண்டதாக அவர்கள் கூற, அதிர்ச்சியடைந்தார் அனெஸ்ஸா. தம்பதியருக்குள் பிரச்சினை ஏற்பட்டு அனெஸ்ஸா கலிபோர்னியாவிலும், டிம் ப்ளோரிடாவிலும் வாழ்ந்துவந்தார்கள்.
இருவரும் விவாகரத்து செய்வது குறித்து திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில், டிம்முடைய இறுதிச்சடங்குக்கு அனெஸ்ஸா வருவது நன்றாக இருக்காது என்பதால், அவர் இறுதிச்சடங்குக்குக் கூட செல்லவில்லை.
Image: @anessarossii / TikTok
தோழி கொடுத்த தகவல்
குற்ற உணர்ச்சியுடன் அனெஸ்ஸா வாழ்ந்துவரும் நிலையில், சில மாதங்களுக்குப் பின் அவருடைய தோழி ஒருவர் அவருக்கு ஒரு தகவலைக் கூறியிருக்கிறார்.
சமூக ஊடகம் ஒன்றிலிருந்து கிடைத்த செய்தி ஒன்றில், டிம் உயிருடன் இருப்பதும், ஆறு ஆண்டுகளாக அனெஸ்ஸாவுக்குத் தெரியாமல் தவறான தொடர்பு வைத்திருந்த ஒரு பெண்ணுடன் இப்போது அவர் வாழ்க்கை நடத்திவருவதும் தெரியவரவே, அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார் அவர்.
Image: @anessarossii / TikTok
டிம் தரப்பு விளக்கம்
ஆனால், டிம் அனெஸ்ஸா மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். தான் ஏற்கனவே அனெஸ்ஸாவிடம் விவாகரத்து கோரியதாகவும், அவரது தாய் கோமாவில் இருப்பதாகவும் அனெஸ்ஸா பொய் சொன்னதாகவும், மேலும், அவரது வயிற்றில் ஒரு பெரிய தழும்பு இருக்க, அது என்ன என டிம் கேட்க, தன்னை ஒருவர் பாலியல் ரீதியாக தாக்கியதால் ஏற்பட்ட தழும்பு என அவர் கூறியதாகவும் தெரிவிக்கிறார் டிம்.
Image: @anessarossii / TikTok
ஆனால், அனெஸ்ஸாவின் தாய் கோமாவில் எல்லாம் இல்லை. அத்துடன் அவர் டிம்மிடம், அனெஸ்ஸா வயிற்றிலிருக்கும் தழும்பு, வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க அவர் செய்துகொண்ட அழகியல் சிகிச்சையால் ஏற்பட்டது என கூறியிருக்கிறார்.
இப்படி இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்லிக்கொள்ள, டிம், அவரது இரகசிய காதலி மற்றும் தன் தாய் ஆகிய மூவரும் சேர்ந்து தனக்கெதிராக சதி செய்துவிட்டதாக புலம்பிக்கொண்டிருக்கிறார் அனெஸ்ஸா.
Image: @jessethlopez / TikTok